ராஜா ராணி 2 அப்டேட் – சந்தியாவிற்கு நான் பொருத்தமானவன் கிடையாது என்று தவிக்கும் சரவணன்!!

0

ராஜா ராணி சீரியலில் பார்வதிக்கு நிச்சயம் நடக்கவுள்ள நிலையில் சந்தியாவை பற்றி சிவகாமி கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறார். இதனால் அர்ச்சனாவுக்கு கோவமாக வருகிறது.

ராஜா ராணி 2

சந்தியா அந்த போலியான காவல் அதிகாரிகளை பிடித்து போலீசிடம் காட்டி கொடுக்க இதனால் சந்தியாவிற்கு தொடர்ந்து பாராட்டு மழை குவிந்து வருகிறது. மேலும் சரவணனுக்கு சந்தியாவிற்கு தான் பொருத்தம் இல்லை என்று தோன்றுகிறது.

raja rani 2

பார்வதி நிச்சயத்திற்கு பிறகு சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடலாம் என்று யோசிக்கிறார் சரவணன். மேலும் சந்தியாவிற்கு அனைவருமே தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது சரவணனுக்கு ஒரு மாதிரியாக உள்ளது. சரவணனின் நிலைமை சிவகாமிக்கு நன்றாக புரிய ஆரம்பிக்க அதனை பார்த்து வேதனையடைகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க சந்தியாவின் இன்டெர்வியூ டிவியில் ஒளிபரப்பாகிறது. அதனை பார்த்த ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷத்தில் திளைக்கிறது. இது அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. ரூமில் அர்ச்சனா சந்தியா பெரிய லேடி சூப்பர்ஸ்டாரா?? என்று கண்டபடி பேசுகிறார்.

இதனால் கோவமடையும் செந்தில் அந்த இடத்தை விட்டே செல்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி இருக்க போற என்று கத்துகிறார். மேலும் சிவகாமி ரவியிடம் சரவணனின் நிலையை நினைத்து புலம்புகிறார். சந்தியாவிற்கு சரவணன் ஏன் இப்படி இருக்கிறார் என்று புரியாமல் தவிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here