10ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்த மாணவருக்கு கத்திக்குத்து., பரபரப்பு தகவலை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

0
10ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாளை காட்ட மறுத்த மாணவருக்கு கத்திக்குத்து., பரபரப்பு தகவலை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா தானே மாவட்டத்தில் உள்ள Bhiwandi பகுதியில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர், தனது சக மாணவருக்கு விடைத்தாளை காண்பிக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சக மாணவர்கள் 3 பேரும், தேர்வு அறையில் இருந்து வெளியே வந்ததும், அந்த மாணவரை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.அதில் காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இதையடுத்து கத்தியால் குத்திய மூன்று மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ரமலான் அன்று பொதுத்தேர்வு நடைபெறுமா??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here