தமிழகத்தில் ரமலான் அன்று பொதுத்தேர்வு நடைபெறுமா??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!

0
தமிழகத்தில் ரமலான் அன்று பொதுத்தேர்வு நடைபெறுமா??? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!!
தமிழகத்தில் இப்போது 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது இதை தொடர்ந்து 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் பிறை தெரியும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதனால் அன்றைய தினத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற குழப்பம் அனைவரது மனதிலும் இருந்து வந்தது. மேலும் ரம்ஜான் பண்டிகையின் போது விடுமுறை அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வரும் 12ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் பட்சத்தில் அன்று நிச்சியமாக பொது தேர்வு இருக்காது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here