வெளியூர் செல்வதற்கு தமிழக அரசின் ‘Covid 19 e-Pass’ பெறுவது எப்படி தெரியுமா..? முழு விபரங்கள் இதோ..!

0

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல விரும்புவோர் தமிழக அரசிடம் Covid 19 e-Pass பெற்றுக் கொள்ளலாம். அது எப்படி என்ற வழிமுறைகளை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

பாஸ் பெறுவது எப்படி..?

நீங்கள் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் செல்ல தமிழக அரசின் பாஸ் பெற 8099914914 என்ற கைபேசி எண்ணிற்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் மின்நுழைவுச் சீட்டிற்கான சம்பந்தப்பட்ட இணைப்பு உங்கள் அழைபேசி எண்ணிற்கு குறுந்தகவலாக வரும் அல்லது நீங்கள் நேரடியாக https://epasskki.in/ என்ற இணைப்பிற்கு செல்லலாம்.

1 . இணைப்பினை கிளிக் செய்து கைபேசி எண்ணை உள்ளிடவும்.
2 . உங்கள் கைபேசியில் வரப்பெறும் ஒருமுறை ரகசிய குறியீட்டு எண்ணை ( OTP ) உள்ளீடு செய்யவும் .
3 . மின்நுழைவுச் சீட்டிற்கான ( e – Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.
4 . விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் .
5 . பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.

மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here