Home Uncategorized Xiaomi – Redmi, Poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு – காரணம் என்ன தெரியுமா..?

Xiaomi – Redmi, Poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு – காரணம் என்ன தெரியுமா..?

0
Xiaomi – Redmi, Poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு – காரணம் என்ன தெரியுமா..?

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் இந்தியாவில் மொபைல் போன்களுக்கான வரிவிதிப்பு விகிதத்தை 12 முதல் 18 சதவீதத்தில் மாற்றம் செய்தது. இதையடுத்து தொலைபேசிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் அறிவிப்பு..!

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் தொலைபேசிகளின் விலை உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக அந்த நிறுவனத்தின் எம்டி மனு குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சியோமி, ரெட்மி, போக்கோ ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது. தற்போது ஜிஎஸ்டி மாற்றத்தின் படி இந்தியாவில் தொலைபேசிகளின் விலை உயர்த்தவதைத் தவிர வேறு வழியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

போகோ நிறுவனத்தின் விலை..!

போக்கோ எக்ஸ் 2, அதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் முன்பு ரூ. 16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அது, இப்போது ரூ. 17,999 ஆக விற்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ் 2 இன் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டிற்கு இப்போது ரூ. 16,999 எனவும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் வாங்குபவர்களை ரூ.20,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MI வெளியிட்டுள்ள அறிக்கை..!

எம்ஐ ரசிகர்கள் மொபைல் போன்களில் ஜிஎஸ்டி 12% முதல் 18%-ல் இருந்து 50% அதிகரித்துள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை விலையை அதிகரிப்பதாகவும் மேலும் இந்த புதிய விலை உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை நிர்ணயம் விரைவில் அதிகாரப்பூர்வ சியோமி இந்தியா இணையதளத்தில் நேரலைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சியோமியின் வலைத்தளம் இன்னும் மாற்றங்கள் குறித்து விளக்கவில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here