81 அணிகள்.., 972 வீரர்கள்.., சென்னை களத்தில் அரங்கேறும் முக்கிய நிகழ்வு.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு விருந்தா?

0
81 அணிகள்.., 972 வீரர்கள்.., சென்னை களத்தில் அரங்கேறும் முக்கிய நிகழ்வு.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு விருந்தா?
81 அணிகள்.., 972 வீரர்கள்.., சென்னை களத்தில் அரங்கேறும் முக்கிய நிகழ்வு.., ரசிகர்களுக்கு இப்படி ஒரு விருந்தா?

ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் 70-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது.

கைப்பந்து போட்டி தொடக்கம்!!

சென்னை நேரு மைதானத்தில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் 70- வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ், சென்னை ஸ்பைக்கர்ஸ், சுங்க இலாகா, வருமான வரி, ஐ.ஓ.பி., செயின்ட் ஜோசப்ஸ் உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதே போன்று பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், தமிழ்நாடு போலீஸ், பி.கே.ஆர்.(கோபி) எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.ஏ.டி, ஜி.கே.எம்., ஐ.சி.எப். தமிழ்நாடு தபால் துறை பாரதியார் (ஆத்தூர்) செயின்ட் மேரிஸ், ராணி மேரி கல்லூரி உட்பட 49 அணிகள் கலந்து கொள்கின்றனர். இந்த இரு பிரிவில் இருந்து மொத்தம் 81 அணிகள், 972 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த அணிகளுக்கு இடையில் லீக் மற்றும் நாக்- அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்த கைப்பந்து போட்டிக்கு தமிழகத்தில் இருந்து பல வீரர்கள் கலந்து கொள்கின்றனர், இவர்களை வரவேற்கும் விதமாக இன்று மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here