பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ரூ.50,000 பரிசு தொகை., தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கணும்? கர்நாடகாவில் அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு காலம் நெருங்கிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பலரும் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த தமிழ் ஆா்வலரும், கா்நாடக மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளருமான எஸ்.எம்.பழனி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது கர்நாடகாவில் தமிழ் படிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில், 2023-24-ஆம் கல்வியாண்டின் SSLC பொதுத்தேர்வு தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகை பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மே மாதத்தில் நடக்கும் விழாவில் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் படி,

  • தமிழ் மொழிப்பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.10,000மும்,
  • இரண்டாம் இடம் பிடிக்கும் இரு மாணவர்களுக்கு தலா ரூ.5,000மும்,
  • மூன்றாம் இடம் பிடிக்கும் மூன்று மாணவர்களுக்கு தலா ரூ.3,000மும்,
  • ஊக்கப்பரிசாக 21 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 மும் என மொத்தமாக ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here