தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்.,, கல்வித்துறை முக்கிய உத்தரவு!!

0

தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வித் தரத்தையும், தேர்ச்சி விதத்தையும் அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி கல்வி திட்டம், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் கல்வி திட்டம், காலை உணவு திட்டம் ஆகியவற்றை அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவின் பேரில், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் சராசரியாக 50 முதல் 60 % வரை தேர்ச்சி விகிதத்தை பெறுவதற்கு, காலை மாலை 2 வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களுக்கு எந்த பாடம் புரியவில்லை என்பத கவனித்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாது, தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம் மாதந்தோறும் நடத்தி பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை வழங்க வேண்டும். மேலும் தலைமை ஆசிரியர்கள் அவருடைய பாடவேளையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மாதந்தோறும் குறைந்தபட்சம் 12 பள்ளிகளில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here