பொன்முடிக்கு MLA  பதவி மீண்டும் கிடைக்குமா? சபாநாயகர் கொடுத்த விளக்கம்.. முழு விவரம் உள்ளே!!

0
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக பொன்முடி அவரது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதை அடுத்து அவருக்கு மீண்டும் எம்எல்ஏ பதிவி கிடைக்குமா என்று அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் சபாநாயகர் அப்பாவு ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடி வழக்கிலும் சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இது தொடர்பாக சட்டப்பேரவை முதன்மை செயலாளருடன் பேசியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here