தெற்காசிய கால்பந்து லீக்: தொடர்ந்து அசத்தும் இந்திய படை…, டிராவில் முடிந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டி!!

0
தெற்காசிய கால்பந்து லீக்: தொடர்ந்து அசத்தும் இந்திய படை..., டிராவில் முடிந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டி!!
தெற்காசிய கால்பந்து லீக்: தொடர்ந்து அசத்தும் இந்திய படை..., டிராவில் முடிந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டி!!

தெற்காசிய கால்பந்து லீக் தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி கோலின்றி டிராவில் முடிந்தது.

தெற்காசிய கால்பந்து லீக்:

இருபது வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து லீக் (SAFF) தொடரானது, பங்களாதேஷில் உள்ள டாக்காவில் கடந்த 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பங்களாதேஷ், நேபாளம், பூடான் மற்றும் இந்தியா ஆகிய 4 அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை மோதி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வகையில், இந்திய பெண்கள் அணியானது, முதலில் பூடான் அணியை 12-0 என்ற அபாரமான கோல் வித்தியாசத்தில் வென்றது. இதனை தொடர்ந்து, நேற்று இந்திய அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இந்திய அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது. ஆனால், அது ஆப் சைட்டாக இருந்ததால் புறக்கணிக்கப்பட்டது.

IND vs AUS: “இதில் தான் இந்திய அணி அதிக கவனம் செலுத்த வேண்டும்”…, ராகுல் டிராவிட் புதிய வியூகம்!!

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், இரு அணியினரும் கோல் அடிக்காத நிலையில், போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த தொடரில், இந்தியா 2 போட்டிகளில், 1ல் வெற்றி 1ல் டிரா செய்து 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. இருப்பினும், நாளை லீக் சுற்றில் கடைசி போட்டியாக இந்திய அணி நேபாளம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here