ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரையில் ‘சூரரைப் போற்று’ – இன்று திரையிடல்!!

0

நடிகர் சூர்யா நடித்து ஓடிடி தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஐந்து பிரிவின் கீழ் இப்படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘ சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏர் டெக்கான் என்ற குறைந்த விலையில் விமான போக்குவரத்து வசதியை உருவாக்கிய கேப்டன் கோபிநாத் என்பவரின் சுயசரிதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

வைரலாகும் ‘ குட்டி தல’ புகைப்படங்கள் – ட்ரெண்டிங்கில் ஆத்விக் அஜீத்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படம் தற்போது உலகின் மிக சிறந்த திரைப்பட விருதான ஆஸ்கார் விருதுக்கான திரைப்படம் திரையிடலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஸ்கிரீன் ரூமில் திரையிடப்படவுள்ள இத்திரைப்படத்தை உலகமெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்கார் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிடவுள்ளனர். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்த திரையிடலில் ஒளிபரப்பாகும். அதில் சூரரை போற்று படமும் தேர்வாகியுள்ளது. இப்படத்தில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த கதாசிரியர், சிறந்த இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டியிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் துணை தயாரிப்பாளர் ராஜேஷ் கூறுகையில், ‘ சூரரைப் போற்று திரைப்படம் அனைத்து மக்களையும் கவர்ந்தது போல ஆஸ்கார் குழு உறுப்பினர்களையும் கண்டிப்பாக ஈர்க்கும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறியுள்ளார். கொரோனா காரணமாக ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவானது ஏப்ரல் மாதம் 25 ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here