இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி – சோனு சூட் அதிரடி

0

கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவ முன்வந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நடிகர் சோனு சூட் தற்போது இலவச ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சோனு சூட்:

கொரோனா முதல் அலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை உடனுக்குடன் செய்து மக்களின் மத்தியில் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சோனு சூட். மக்களின் குறைகளை தீர்க்க அவசரகால உதவிகளை விரைந்து செயல்பட்டு வந்த நடிகர் சோனு சூட் தற்போதும் அதே துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊருக்கு செல்வதற்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தது, ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் இல்லாத மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்தது, உணவுக்காக தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கி வருவது என அனைத்தையும் கடந்து நோயாளிகளுக்கு உதவுவதற்காக 16 மாநிலங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவவுள்ளதாக அவர் கூறி இருந்தார்.

தற்போது கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தேர்வுகளை எழுத பயிற்சி வழங்கும் பயிற்சி மையங்களும் அடைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் மீந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் சூட் அறக்கட்டை மற்றும் தியா நியூ டெல்லி ஆகியவை இணைந்து இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் சோனு சூட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here