ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய யூத் பட கதாநாயகி… இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய்யின் யூத் படத்தில் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஷாஹீன் கான். தமிழில் நடிப்பதற்கு முன்பாக இவர் மற்ற மொழி படங்களும் நடித்துள்ளார். தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார்.

தன் நடிப்பு மற்றும் பன்முக திறமையால்  தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து இருப்பவர் விஜய். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என நடிகைகள் மட்டும்மல்லாமல் குணச்சித்திர நடிகர்கள் ஏங்கும் அளவிற்கு உள்ளவர். இந்நிலையில் அவரின் நடிப்பில் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2002  வெளிவந்த படம் “யூத்”. இது மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையை படைத்தது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷாஹீன் கான், ‘சந்தியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்பு இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பியவர்.

மாடலிங் துறை மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ஷாஹீன் கான். அதன் பின்னர் ‘ஃபேரன் லவ்லி’ என்ற மிகப் பிரபலமான விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். இது அவருக்கு பட வாய்ப்புகளை பெற்று தந்தது. இதன் மூலம்  நடிகை சாஹீன் கான் முதன்முதலாக தெலுங்கில் வெளிவந்த ‘நவ் தவலு’ என்ற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தமிழில் “யூத்” படத்தில் நடித்தார். இருப்பினும் தமிழில் இதுவரை அவர் “யூத்” ஒன்றில் மட்டுமே நடித்து உள்ளார்.

அதற்கு பின் தமிழில் வாய்ப்புகள் வந்தும் அதை அவர் ஏற்க வில்லை.  அதன்பின் அவர்  மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கானை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  ஆலம் கான் என்ற ஒரு குழந்தை உள்ளது. தற்போது அவர் தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here