சூர்ய காந்தப்புயலால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து – அதுவும் இந்த விதத்திலா??

0

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வின் படி சூரியனில் ஏற்படும் காந்தப்புயலால் பூமியில் இணைய சேவை பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக தற்போது தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும் போது புயலாக மாறி அண்ட வெளியில் அவ்வப்போது பரவி வருகிறது. சூரியனில் ஏற்படும் வெடிப்புகளினால் இந்த சூரிய புயல் உருவாகிறது.  இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர் சங்கீதா அப்து ஜோதி இந்த சூர்ய காந்தப்புயல் பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதாவது சூரியனிலிருந்து வெளியாகும் இந்த காந்தப் புயல் மிகவும் சக்திவாய்ந்தது என்றும், பூமியின் மின்காந்த அலைகளில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் சூரியப் புயலின் அளவு ஒன்றரை சதவீதத்தில் இருந்து பன்னிரண்டு சதவீதம் வரை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

மேலும் சூரியனிலிருந்து வெளியாகும் காந்தப் புயல் தொலைத் தொடர்பு, செயற்கைக் கோள் போன்றவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படத்தும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here