பல்பு வாங்கிய மஹிந்திரா உரிமையாளர் – பெண் என்று நினைத்து செய்த செயல்!!!

0

நான் பெண் இல்லை என்றும் தான் ஒரு ஆண் என்று ஆனந்த் மஹிந்திரா ஒரு ட்வீட் ஒன்றை சமீபத்தில் போட்டிருந்தார். மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைத்தளமான ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். நல்ல விஷயம் ஏதேனும் நடைபெற்றால் அதனை உடனடியாக பாராட்டி அதனை தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிடுவார். சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றினை பதிவிட்டுருந்தார். அதில் இந்த பெண்ணின் பக்கத்தில் யாரும் வந்து விடாதீர்கள். களரிப்பட்டு விளையாட்டினை எவ்வளவு அழகாக செய்கிறார் என்று கூறி இருந்தார். களரிப்பட்டு என்பது நமது நாட்டின் ஒரு வகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டினை கண்டிப்பாக கற்று கொள்ள வேண்டும் என்றும் அதனை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவிற்கு வீடியோவில் இருக்கும் மாணவர் தான் அந்த வீடியோவில் இருப்பதாகவும், அதனால் மிகவும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். பின்னர்,அந்த மாணவர் நான் களரிப்பட்டு விளையாட்டினை மையப்படுத்தி எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதன் காரணமாக முடியை நீளமாக வளர்ந்துள்ளேன். இதனால் பலரும் என்னை பெண் என்று கூறுகின்றனர். அதே போல தான் நீங்களும் என்னை பெண் என்று தவறாக நினைத்து விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பதிவிட்டுள்ள வீடியோவில் இருப்பவரின் பெயர், நீலகண்ட நாயர். இவருக்கு 10 வயது தான் ஆகிறதாம். கேரளாவில் செயல்பட்டு வரும் களரிப்பட்டு விளையாட்டு கற்று தரும் மையத்தில் அவர் பயிற்சி எடுத்து வருகிறாராம். கேரளாவின் பழமையான விளையாட்டாக பார்க்கப்படும் இந்த விளையாட்டு 300 ஆண்டுகள் பழமையானதாம். இந்த விளையாட்டினை பல போர் வாள்கள் கொண்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த விளையாட்டிற்கு பிறகு தான் கராத்தே, குன்ஃ போன்ற விளையாட்டுகள் என்றும் தெரிவிக்கின்றனர் இதனை கற்று கொள்கிறவர்கள். இந்த விளையாட்டினை அனைவரும் கற்று கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பெண்கள் கற்று கொள்ள முன்வர வேண்டும் என்று நீலகண்டன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here