சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சிக்கல் –  பாதியில் நிறுத்தப்பட்ட ஷூட்டிங்., வெளியான பகீர் பின்னணி!!

0
தளபதி விஜய்யை  விமர்சித்த  சிவகார்த்திகேயன்.., வச்சு செய்த நெட்டிசன்கள்..,
தளபதி விஜய்யை  விமர்சித்த  சிவகார்த்திகேயன்.., வச்சு செய்த நெட்டிசன்கள்..,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஷூட்டிங் நிறுத்தம்:

நடிகர் சிவகார்த்திகேயன், தனது டான் திரைப்படத்தை தொடர்ந்து  மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் அதிதி இணைந்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான, விருமன் திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி இணைந்து நடிக்கும் இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

படத்திற்கு போதுமான பணம் இல்லாமல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் அதற்கான, எந்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here