
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஒருவழியாக மீனா முத்துவின் குடும்பத்துடன் சேர்ந்து விட்டார். ஆனால் மீனாவை முத்து ஏற்று கொள்ள கூடாது என விஜயா நினைக்கிறார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சமையல் அறையில் இருக்கும் ரோகிணியை வெளியே வருமாறு மீனா கூப்பிடுகிறார். அதற்கு விஜயா என் மருமகளை எதற்காக நீ கூப்பிடுகிறார் என கேட்கிறார். அதற்கு மீனா கொரியர் பாய் வந்திருக்கிறார் அதனால் தான் கூப்பிடுகிறேன் என கூறுகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இதன் பின்னர் வெளியே வந்த ரோகிணி அந்த கொரியர் மேனாக வந்திருக்கும் தன்னுடைய PA வை பார்த்து ஷாக்காகிறார். அதன் பின் வெளியே வந்த ரோகிணியிடம் ஒருவாரத்திற்குள் தனக்கு 50000 பணம் தரவேண்டும் இல்லாவிட்டால் உன்னை பற்றிய உண்மையை உன் குடும்பத்தில் புட்டு புட்டு வைத்துவிடுவேன் என கூறுகிறார். இதனால் பதறியபடி அவரிடம் ரோகிணி பேசுகிறார். மேலும் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்த மீனாவுக்கு எதற்காக ரோகிணி அவரை பார்த்து பயப்படுகிறார் என சந்தேகம் வருகிறது. இதைவைத்து பார்க்கும் போது கூடியவிரைவில் ரோகிணி கையும் களவுமாய் மீனாவிடம் மாட்டிக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஏய்., இந்த ஆர்டர் போடும் வேலை என்கிட்ட வேணாம்., ஆணவத்தின் உச்சத்தில் மாயா., அனல்பறக்கும் BB ப்ரோமோ!!