நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும் அவர்களின் நலனுக்காக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கூட சமீபத்தில் மத்திய அரசு விலைப்படியை உயர்த்தியதை அடுத்த மற்ற மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தினர். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது அம்மாநிலத்தில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் B மற்றும் குரூப் C பணியாளர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர இந்த திட்டத்திற்காக ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பான் கார்டு தொலைந்தாலும் இனி கவலையே இல்லை…, இது மட்டும் பண்ண போதும்…, முழு விவரம் உள்ளே!!