ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

0
Singapore
Singapore

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு ஜூன் 1 வரை ஊரடங்கை நீட்டித்து தன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா:

சிங்கப்பூரில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 801 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை 11 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் ஏற்கனவே மே 4 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாளுக்குநாள் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருவதால் அந்நாட்டு அரசு மேலும் 4 வாரங்களுக்கு (ஜூன் 1) வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here