ஒளிப்பதிவாளரை துப்பாக்கியால் சுட்ட நடிகர் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபரீதம்!!

0

மெக்சிகோவில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது நடிகர் துப்பாக்கியால் சுட்டதில் படத்தின் ஒளிப்பதிவாளர் பலியான சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம்:

வெளிநாட்டில் இயக்கப்படும் ஹாலிவுட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மெக்சிகோ நாட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரஸ்ட் என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது. இந்த படத்தின் நாயகனாக நடிகர் அலெக் பால்ட்வின் நடித்து வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்ட போது அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.

இது மட்டுமல்லாமல், இந்த படத்தின் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனை அடுத்து படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here