தவானை அம்போன்னு விட்ட BCCI.., இவங்களுக்கு திறமை மட்டும் போதாது போலயே.., விமர்சிக்கும் ரசிகர்கள்!!

0

சர்வதேச போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த ஷிகர் தவானை இன்று இந்திய அணியும், நிர்வாகமும் வாய்ப்பு கொடுக்காமல் தவிக்கவிட்டு வருகிறது.

ஷிகர் தவான்

இந்திய அணியில் ஒரு காலத்தில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான் தனிக்காட்டு ராஜாவாக சுற்றி வந்தார். இவரது திறமையினால் இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி அடைய செய்துள்ளார். அதன்படி 2013 சாம்பியன்ஸ் டிராபி , 2015 உலகக் கோப்பை மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். இந்த அதிரடி ஆட்டத்தால் ரசிகர்கள் இவரை செல்லமாக ‘கப்பர்’ என நிக் நேம் வைத்து கூப்பிட்டு வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டார். இதுமட்டுமல்லாமல் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை கடந்த வீரர் மற்றும் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்சுகள் கைப்பற்றிய வீரர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ளார். இவ்வளவு சாதனை படைத்த ஷிகர் தவானை BCCI கழட்டி விட்டது. தற்போது இந்திய அணி பல நாடுகளுக்கு எதிராக பிஸி ஷெடியூலில் விளையாடி வருகிறது.

அந்த போட்டிகளில் பல வீரர்கள் மோசமாக விளையாடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு BCCI உலக கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட இடம் கொடுத்துள்ளனர். அதே சமயம் திறமையாக விளையாடும் ஷிகர் தவானை BCCI உலக கோப்பை போட்டியில் மட்டுமல்லாமல், அனைத்து போட்டிகளிலும் ஒதுக்கி வைக்கின்றனர். மேலும் போட்டிக்கு திறமை இருந்தா போதும், ஆனால் தவானிடம் அது எல்லாமே இருந்தும் ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படியே சென்றால் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கும் என ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here