திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – இதை மட்டும் செய்யவே கூடாது! கோவில் நிர்வாகம் கறார்!!

0
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - இதை மட்டும் செய்யவே கூடாது! கோவில் நிர்வாகம் கறார்!!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தரிசனம் செய்ய போகும் பக்தர்கள் இதை மட்டும் செய்யவே கூடாது என கோவில் நிர்வாகம் கறாராக அறிவித்துள்ளது.

நிர்வாகம் கறார் :

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இது போன்ற முக்கிய தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, உற்சவர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் இணைந்தும் கோவில் வீதிகளில் வைர மற்றும் தங்க நகைகளுடன் வீதியுலா வருவர். அப்போது கோயில் மாட வீதிகளில், இருக்கும் பக்தர்கள் சுவாமி மீது ரூபாய் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை வீசி எறிவர். இதனை பக்தர்கள், நிச்சயம் தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நானே வருவேன்’ படத்தின் சூப்பர் அப்டேட்.., அதிகாரபூர்வமாக செல்வராகவன் வெளியிட்ட பதிவு!!

பக்தர்களின் இந்த செயலால் அர்ச்சகர்களும், சீர் பாத தூக்கிகளும் சிரமத்திற்கு உள்ளவர். மேலும் சுவாமிக்கு செலுத்தும் காணிக்கைகளும் சேதமாகும். இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கோவில் அறங்காவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here