‘மைனர் பெண்ணின் கையை பிடித்தால் ஒருவர் மீது போஸ்கோ சட்டம் பாயாது’ – மும்பை உயர் நீதிமன்ற கிளை!!

0

ஹைதராபாத்தில் 38 வயதான ஒருவர் ஒரு இளம்பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளதாக கைது செய்யப்பட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அளித்த சர்சையான தீர்ப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனடிவாலா, ‘பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் மைனர் பெண்ணின் கையை பிடித்ததற்காக அது பாலியல் சீண்டல் ஆகாது. குற்றம் சாட்டப்பட்டவரின் உடைகள் திறந்திருந்தாலோ பெண்ணின் கையை பிடித்ததாலோ இது பாலியல் குற்றம் என கருதப்படாது. அதனால் சம்பந்தப்பட்ட நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்கமுடியாது’ என கூறி அந்நபரை விடுதலை செய்துள்ளார். இந்த தீர்ப்பு இந்திய அளவில் சர்சைக்குள்ளானது.

கால்ஸ் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிடும் சித்ராவின் பெற்றோர்கள்!!

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். அந்நபருக்கு போக்ஸோ சட்டம் 8 ம் பிரிவின் கீழ் தணடனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றத்தை நிரூபிக்க போதிய முகந்தாரம் இல்லை என மும்பை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவரை கீழ் நீதிமன்றம் கொடுத்திருந்த போக்ஸோ சட்டம் 8 மற்றும் 10 பிரிவிலிருந்து அவரை விளக்கி இருந்தார்.

தற்போது அந்த நபரின் மீது இந்திய தண்டனை சட்டம் 347A 1(i) பிரிவின் கீழ் தற்போது அவருக்கு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும் என தெரிகிறது. மேலும் அவர் விடுதலையாக்கப்பட்ட அதே சட்டம் 12 ன் கீழ் அந்நபர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here