திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் இந்த சேவைகள் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்பு!

0
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் இந்த சேவைகள் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதம் இந்த சேவைகள் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 1 முதல் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கான குறிப்பிட்ட சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தரிசன சேவைகளுக்கான டிக்கெட்களையும் ஆன்லைன் மூலமாகவே ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தற்போது, ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஏழுமலையான் கோவிலில் சில குறிப்பிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரைக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஒரு மாத காலத்திற்கு மட்டும் நீராடல் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்குளத்தில் அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிவடைந்வுடன் குளத்தில் நீர் நிரப்பி வழக்கம் போல நீராடல் சேவைகள் துவங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் திருக்குளத்திற்கு தினமும் நடத்தப்படும் புஷ்கரணி ஆரத்தியும் அடுத்த ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா?? இத பண்ணுங்க.., ஈஸியான டிப்ஸ் இதோ!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here