ஓஹோ.. அப்போ இந்திய மக்கள் எல்லாருக்கும் தடுப்பூசி போட இவ்ளோ வருஷம் ஆகுமா??

0

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவன தலைமை செயலாளர் அதார் பூனவல்லா கூறியுள்ளார்.

பெருந்தொற்றான கொரோனா வைரஸுக்கு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி தந்தது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையினால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகிறது.அரசின் தகவலின்படி இதுவரை 18,58,09,302 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி விநியோகிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயலாளர் அதார் பூனவல்லா நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here