தமிழகத்தில் முழு ஊரடங்கில் தீவிர கண்காணிப்பு – தலைமைச் செயலாளர் உத்தரவு..!

0
Tamilnadu Police
Tamilnadu Police

தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமலாக உள்ள 4 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30 நள்ளிரவு வரை 12 நாட்களுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. கடந்த ஊரடங்கு உத்தரவுகளைப் போல் இல்லாமல் இதில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Tamilnadu Government
Tamilnadu Government

இது தொடர்பாக 4 மாவட்டங்களில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டு உள்ளார். நகர எல்லையில் தீவிர வாகன தணிக்கையை மேற்கொண்டு கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் முழு ஊரடங்கை தீவிரமாக நடைமுறைப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here