யோகாவில் ஏற்படும் நன்மைகள்..? சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் உரை..!

0
world yoga day
world yoga day

நாடெங்கிலும் ஜூன் 21 தேதியில் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அன்று யோகா பற்றிய நன்மைகளை பற்றி மக்களுடன் பிரதமர் மோடி உரையாட உள்ளார்.

சர்வதேச யோகா தினம்

மக்களவைத் தேர்தலில் 2014-ம் ஆண்டு வெற்றிபெற்று, இந்திய பிரதமரான நரேந்திர மோடி பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் யோகா தினம் சர்வதேச அளவில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் யோகா பயிற்சிகள் நடைபெறும். ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர் மோடி யோகா தின பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற யோகா தின பயிற்சியில் கடந்த வருடம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

world yoga day
world yoga day

இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று யோகா தின பயிற்சியில் ஈடுபடுவது இயலாத காரியம். இந்நிலையில், சர்வதேச யோகா தினமான ஜூன் 21-ம் தேதி நாட்டு மக்களுடன் டெல்லியில் இருந்தப்படி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அப்போது, யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கவுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here