“சீன பொருட்களை வாங்க கூடாது” என்று எச்.ராஜா ட்வீட் – கேள்விகள் கேட்டு திணறடித்த இணையவாசிகள்..!

2
H Raja
H Raja

லடாக் இல் நடந்த பிரச்சனையால் பலரும் சீனா பொருட்களை வாங்க கூடாது என்று தீவிரமாக தெரிவித்து வந்த நிலையில் எச்.ராஜா வும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததற்கு இணையவாசிகள் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

லடாக் பிரச்சனை:

india-china
india-china

கடந்த சில நாட்களாக இந்திய சீனா எல்லையான லடாக்கில் பல பிரச்சனைகள் வந்து உள்ளது. அதில் உச்சம் பெற்றாற் போல் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக நம் நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதிலும் 4 வீரர்களின் உயிர் கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. இதனால் பலரும் கவலையில் உள்ளனர். ஆனால் சீனா அரசு, தங்களுக்கு தான் நிறைய உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது, என்றும் 20 உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தகவல்களை பரப்பி வருகிறது.

இதனால் இந்திய மக்கள் மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா சீனா அரசுக்கு முக்கிய வர்த்தக சந்தையாக உள்ள நிலையில் அவர்கள் ஏன் இப்படி தேவை இல்லாமல் பகைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.

பலரின் கருத்து:

இதனால் பலரும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் அனைவரும் வைக்கும் கருத்து ” சீனா உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்க கூடாது” என்பது ஆகும். இந்த கருத்துக்கள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது மக்கள் கருத்து மட்டும் அல்லாமல் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள் அனைவரின் கருத்துக்கள் ஆகும்.

எச்.ராஜாவின் கருத்து:

பாஜகவின் தேசிய செயலாளரும் மூத்த தலைவருமான எச்.ராஜாவும் கண்டன ட்வீட் ஒன்றை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ” இனியும் சீனாவை வாலாட்ட விட கூடாது, தக்க பதில் கொடுக்க வேண்டும், மொத்த இந்தியாவின் கருத்தும் இது தான்” என்று கூறி உள்ளார். “எல்லைப் பகுதியில் அத்துமீறல். கம்யூனிச சீனா அட்டூழியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எல்லையில் ராணுவ வீரர்கள் இன்னுயிரை ஈந்து நாட்டை பாதுகாக்கின்றனர். நாம் சீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும்” என்று தெரிவித்ததுடன், லடாக் எல்லை மோதல் குறித்து, வெளியுறவு துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா கூறிய விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.

BJP national secretary
BJP national secretary

பெரும்பாலானோரின் கருத்தையே எச்.ராஜாவும் தெரிவித்து இருந்தார். அவர் பலரின் கருத்தை தான் பதிவிட்டு இருந்தார். ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராஜாவுக்கு கொடுக்கப்பட்ட பதிலடி:

raja tweet
raja tweet

“சீனப்பொருட்கள் இப்பொழுதுதான் நீங்கள் பயன்படுத்த துவங்கியுள்ளீர்களா? உலகமயமாக்கல் கொள்கை என்பது நினைவிருக்கிறதா?” என்றும், 2,989 கோடி சீனாவிடம் கொடுத்து சர்தார் வல்லபாய் சிலை செய்ய சொன்னது மோடி தானே ? அதை இந்தியாவில் செய்து இருக்க முடியாதா ? சீனாவில் இருந்து வந்த சர்தார் வல்லபாய் சிலை சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுமா? நம் பணம் நமக்கு திரும்ப கிடைக்குமா” என்றும் கேள்விகளை எழுப்பி கொண்டுள்ளனர்.

2 COMMENTS

  1. அப்ப “make in India” திட்டம் சும்மாவா! இந்திய தேசிய (காங்கிரஸ்) தலைவர், அதுவும் BJP யின் மானசீக தலைவரை நம் நாட்டிலேயே செய்திருக்கலாமே! மக்களின் அதிருப்தியை தொடர்ந்து சம்பாதித்து வருகிறது பிஜேபி. பேசுவது ஒன்று! செய்வது என்று! சரி..ராசா சொல்வதை பிரதமர் சொல்வாரா? இதனை ராசா, பிரதமருக்கு open அறிக்கையாக கொடுத்து தன் அவசரத்தனத்தை காண்பிக்கலாம்.

    • True Raja sir only speaking. In Vain no useful actions by Him as well current leader’s from His part’y
      They lost 2Good Minister’s Paikar and Sushma Madam
      All others are nil performance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here