சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் – ரசிகர்கள் வாழ்த்து!

0
சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் - ரசிகர்கள் வாழ்த்து!

செய்தி வாசிப்பாளரான கண்மணி மற்றும் சீரியல் பிரபலமான நவீன் இருவருக்கும் இன்று மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் சீரியல் பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

நவீன் – கண்மணி:

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான கண்மணிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். செய்தி வாசிப்பாளராக இருந்து திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். வலிமை மற்றும் பீஸ்ட் திரைப்படத்தில் கூட செய்தி வாசிப்பாளராக கண்மணி நடித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தான் கண்மணிக்கும் சீரியல் பிரபலமான நவீனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இருவருக்கும் எப்போது திருமணம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில், நவீன் மற்றும் கண்மணி இருவரும் சென்னையில் உள்ள பிரமாண்டமான திருமண மண்டபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் அனைவரும் நவீன் மற்றும் கண்மணி ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here