கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தனி வார்டுகள் – சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!

1
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தனி வார்டுகள் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தனி வார்டுகள் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் புதிதாக பரவிவரும் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து மராட்டிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் – கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!!

கருப்பு பூஞ்சை:

இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது எந்த மாநிலமும் கொரோனாவில் இருந்து மீளாத நிலையில் புதிதாக ஓர் நோய் பரவ தொடங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் இந்த வகை நோய் மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது.தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அங்கு 1500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 52 பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கருப்பு பூஞ்சை:சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!
கருப்பு பூஞ்சை:சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கருப்பு பூஞ்சை நோய் மிக சவாலாக உள்ளது.இதற்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு சிகிச்சை மேற்கொள்ள மூக்கு, தொண்டை, காது நிபுணர்கள் என பலர் தேவைப்படுவதாக தெரிவித்தார். அதேபோல் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்காக 5 ஆயிரம் ஊசி மருந்துகள் தற்போது மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளது என்றும் இவை அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here