சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!!

0

தொடர்மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இன்று பகல் 12 மணியளவில் ஏரி திறக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு:

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்மழையின் காரணமாக இப்பொழுது 22 அடி நீர் மட்டத்தை எட்டியுள்ளது. ஒரு வினாடிக்கு 4,027 கன அடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்திற்கு ஏற்றவாறு படிப்படியாக நீர் வெளியேற்றத்தின் அளவு உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு காரணமாக குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, சிறுகளத்தூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அடையாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் தொடர்மழையின் காரணமாக நிரம்ப போவதால் இன்று 12 மணியளவில் ஏரி திறக்கப்படும் என செம்பரம்பாக்கம் ஏரியின் உதவி பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு தெரிவித்துள்ளனர். வினாடிக்கு 1000 கன அடி நீர் வரை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015க்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து ஏரி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here