பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு நெருங்கியது – தேர்வு அட்டவணை தயாரிப்பு பணிகள் தீவிரம்!!

1
College
College

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் பள்ளி,கல்லுரிகள் எதுவும் செயல் படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை எதிர்த்து பல்கலைக்கழகங்கள் வழக்கு தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு என்று அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று முதல் மாநிலம் முழுவதும் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் அரசு, இணைவு பெற்ற மற்றும் தனியார் என 156 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன.

தமிழகத்தில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை!!

Exams
Exams

நடப்பு பருவத்திற்க்கான பாடங்கள் அனைத்தும் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளில் முடிக்கப்பட்டு விட்டதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் டிசம்பர் 14 முதல் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும், அதற்கான அட்டவணை தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here