தமிழகத்தில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை – உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம்!!

0
Chennai_High_Court
Chennai_High_Court

மும்பையில் மன்னர் சிவாஜியை கொண்டாடுவது போல் தமிழகத்தில் மன்னர்கள் கொண்டாடப்படுவதில்லை என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு குறித்து சுற்றுலா, சுகாதாரத்துறை செயலர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற வழக்கு:

கோயமுத்தூர் அரண் பணி அறக்கட்டளை இயக்க செயலாளர் தியாகராஜன் என்பவர் ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க அனுமதிக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.மேலும் கும்பகோணம் உடையாலுரில் ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரியும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். அதை விசாரித்த உயர்நிதி மன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர். ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கான காரணம் இது தான்!!

மேலும் மும்பையின் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு சிவாஜி பெயர் சூட்டப்பட்டிருப்பது மட்டுமல்லமல், அரபிக் கடலில் அவரது பிரம்மாண்டமான சிலை ஒன்றை நிறுவவும் திட்டம் உள்ளது. மஹாராஷ்டிராவில் ஆட்சி செய்த மன்னர்களை அங்குள்ள மக்கள் கொண்டாடுகின்றனர். இவ்வாறாக அந்த பகுதிகளில் மன்னர்களை போற்றுவது போல் தமிழகத்தில் மன்னர்கள் போற்றப்படாதது குறித்து பதிலளிக்குமாறு சுற்றுலா, சுகாதாரத்துறை செயலர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here