‘விரைவில் பள்ளிகள் திறக்கப்படும்’ – மாநில கல்வித்துறை அறிவிப்பு!!

0
school reopen latest

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஒன்பது மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மீண்டும் பள்ளிகள் திறப்பு:

கொரோனா ஊரடங்கால் கடந்த ஒன்பது மாதங்களாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அதிகமாக பரவி வந்ததால் அனைத்து கல்வி நிறுவனகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை ஒட்டி புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படலாம் என அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

தளபதி 65ல் நடிக்கப்போகும் கதாநாயகி இவர் தான்- இணையத்தில் கசிந்த தகவல்!!

delhi school reopen

மேலும் பள்ளிகள் திறப்பு பற்றி அவர் கூறியதாவது “கொரோனா களத்தில் முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு சாதாரண மக்களுக்கு தடுப்பூசி எவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்பதை பொறுத்து எங்கள் எதிர்கால திட்டங்கள் இருக்கும். சிபிஎஸ்சி தேர்வுக்கான அட்டவணைகள் வெளியான நிலையில் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here