நஸ்ரியாவை காதலித்ததற்கு இதான் காரணம் – பகத் பாஸில் Open Talk..!

0

மலையாள நடிகர் பகத் பாஸில் – நஸ்ரியா நாசிம் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது நஸ்ரியாவை பிடித்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

பகத் பாஸில் – நஸ்ரியா நாசிம்..!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிடித்தமான நடிகை நஸ்ரியா நாசிம் அவர் அறிமுகமான சில படங்களிலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்துவிட்டார். இவரை க்யூட், எக்ஸ்பிரஷன் குயின் என ரசிகர்களால் அன்போடு அழைப்பார்கள். அதேபோல் மலையாள சினிமாவின் நடிகரான பகத் பாஸில் இவர் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து அனைவரது பாராட்டை பெற்று ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நஸ்ரியா பகத் பாசிலை திருமணம் செய்யும் போது பாசிலை விட 12 வயது சிறியவர். இருந்தாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துப்பாக்கி படத்துல ஏன்டா நடிச்சோம்னு இருக்கு – புலம்பும் பிரபல நடிகை..!

பகத் பாஸிலின் காதல் ரகசியம்..!

இந்நிலையில் நஸ்ரியாவை எப்படி காதல் திருமணம் செய்துகொண்டேன் என அதற்கான காரணத்தை கூறியுள்ளார். பெங்களூரு டேய்ஸ் படப்பிடிப்பில்தான் நஸ்ரியா மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. அதுவரை பகத் பாசில் நடிக்கிறார் என்றால் அனைத்து நடிகர்களும் அவருக்கு ஜால்ரா அடிக்க தான் பார்ப்பார்களாம். ஆனால் நஸ்ரியா பகத் பாசில் என்ற ஒரு ஆளை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லையாம். அவரும் சாதாரண மனிதர்தான் என்பதை போல இருந்தாராம்.

இந்த செயலே பகத் பாசிலுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எப்படியாவது அவரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் பின்னர் காதலாக மாறியது என குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் அவஸ்தைப்பட்ட பகத் பாசில் இடம் அவருடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட நஸ்ரியா தானாகவே வந்து வெளியே செல்லலாமா என கேட்டுள்ளார். அதன் பிறகுதான் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி பெற்றோர்கள் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here