முதலிடத்தை தவற விட்ட ரொனால்டோ…, சவுதி அரேபிய ப்ரோ லீக்கில் கோல் அடிக்க தடுமாற்றம்!!

0
முதலிடத்தை தவற விட்ட ரொனால்டோ..., சவுதி அரேபிய ப்ரோ லீக்கில் கோல் அடிக்க தடுமாற்றம்!!
முதலிடத்தை தவற விட்ட ரொனால்டோ..., சவுதி அரேபிய ப்ரோ லீக்கில் கோல் அடிக்க தடுமாற்றம்!!

சவுதி அரேபிய ப்ரோ லீக்கில் ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி அல்-இத்திஹாத் அணியிடம் தோல்வியை தழுவி முதலிடத்தை அடைய தவறி உள்ளது.

ரொனால்டோ

சவுதி அரேபியாவில் பிரபலமான கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே, லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த லீக் தொடரில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி அல்-இத்திஹாத் அணியை எதிர்த்து மோதியது. இதில், இரு அணிகளும், ஒரு கோல் அடிப்படிப்பதற்காக பல முறை முயற்சித்த போதும் ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றியே முடிந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, நடைபெற்ற 2வது பாதியில், அல்-இத்திஹாத் அணியின் ரோமரினோ 80 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதே நிலையே ஆட்டத்தின் கடைசி நேரம் வரை தொடர்ந்தால், ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி 0-1 என்ற கோல் வீழ்த்தியாத்தில், அல்-இத்திஹாத் அணியிடம் தோல்வியை தழுவியது.

IPL 2023: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ்…, சாம்பியன் பட்டம் வெல்ல கைகொடுக்குமா??

இந்த சவுதி அரேபிய ப்ரோ லீக்கில் தலா 20 போட்டிகளில் விளையாடி உள்ள, அல்-இத்திஹாத் மற்றும் அல் நாஸ்ர் அணி 47 மற்றும் 46 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளனர். அல்-இத்திஹாத் அணிக்கு எதிரான போட்டியில், ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி வெற்றி பெற்றிருந்தால், முதலிடத்தை பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here