
ஐபிஎல் 2023க்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித், சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
ஐபிஎல் 2023
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதற்கான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும், அதிகரிக்கும் வகையில், ஐபிஎல் குறித்த அப்டேட்டும் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடர்களில் அதிக (5) முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் சீசனுக்கான தங்களது புதிய ஜெர்சியை அணி நிர்வாகம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
தோனியை போலவே செயல்படும் ஹர்மன்பிரீத் கவுர்…, IPL & WPL வில் நிகழ்ந்த தனித்துவ சாதனை!!
இந்த ஜெர்சியானது, MI அணியின் ஸ்பான்சர்ஷிப்புக்களான Slice மற்றும் IDFC First Bank பெயர்களுடன் வழங்கமான நில நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை, MI அணி தங்களது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் திலக் ஆகியோர் புதிய ஜெர்சி அணிந்து சிரிப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளது. கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேற மும்பை இந்தியன்ஸ், எதிர்வரும் சீசனில் ஜெர்சியின் மாற்றத்தால் மீண்டும் பட்டத்தை வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
Ufff…. Ye muskan ki chamak dekh rahe ho 😆
MI Shop pe jao, customise karo aur jersey utha lo 👉 https://t.co/fxEh1tLtmf#OneFamily #MumbaiIndians @surya_14kumar @ImRo45 @TilakV9 @ishankishan51 pic.twitter.com/qFUpBLEZE9
— Mumbai Indians (@mipaltan) March 10, 2023