சசிகலா காரில் அதிமுக கொடி – கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்!!

0

தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சசிகலா தனது காரில் வீட்டிற்கு சென்றார். அவரது காரின் முகப்பில் அதிமுக கொடி இருந்தது. தற்போது இதற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலைமச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு அதிமுக கட்சி ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் கடந்த 2017ம் ஆண்டில் சொத்துகுவிப்பு வழக்கிற்காக தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு அக்ரஹாரா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவருக்கு கடந்த 27ம் தேதியுடன் இவரது தண்டனை காலம் முடிவுக்கு வந்தது. ஆனால் கடந்த 20ம் தேதி அன்று இவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர் கடந்த 27ம் தேதி அன்று விடுதலை ஆனார். பின்பும் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவரது உடல் நலமானதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கிடுகிடுவென குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

மருத்துவமனையில் இருந்து தனது காரில் வீடு திரும்பினார் சசிகலா. ஆனால் அவரது காரின் முகப்பில் அதிமுக கொடி பறக்கவிடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் புகார் மனுவை அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதிமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து தினகரன் காரில் அதிமுக கொடி இருந்தது தப்பில்லை என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here