குடும்பமே சோகமாக இருக்கும் போது கண்ணனும், ஐஸ்வர்யாவும் செய்ற காரியத்த பாருங்களே… கேலியும் கிண்டலும் செய்யும் நெட்டிசன்கள்!!!

0

விஜய் டிவியின் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனாக சரவண விக்ரம் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசனத்திற்கு  ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல்வேறு விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான காட்சி அமைப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் வீட்டின் கடைசி தம்பி கண்ணன் அவர்களின் ரகசிய திருமணத்தால் வீடே நிலைகுலைந்து இருக்கிறது. மேலும் இதனால் வீட்டின் ஆணி வேரான லட்சுமி அம்மா மன அழுத்தத்தால் இறந்து விடுகிறார். இதற்கு காரணம் கண்ணன் தான் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

இவ்வாறு சோகம் சந்தோஷம் கலந்த கலவையாக சீரியல் நகர்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா சில தனிப்பட்ட காரணங்களால் அந்த சீரியல் விட்டு விலக்கப்பட்டார். என்னதான் சீரியல் விட்டு விலகினாலும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் பாசம் மட்டும் தொடர்கிறது. அதாவது இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here