1000 பேருக்கு சமைக்க பலரிடம் கடன் வாங்கும் பாக்கியா – கோபியை எதிர்த்து சவாலில் ஜெயிப்பாரா?

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா அட்வான்ஸ் பணம் போதுமானதாக இல்லாததால் அனைத்து இடங்களிலும் கடன் சொல்லி பொருளை வாங்குகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அமிர்தா வீட்டிற்கு வந்து பாக்கியாவிற்கு பக்கபலமாக இருக்கிறார். இதனை பார்த்த ஈஸ்வரி படிக்கிற வயசுல உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று சொல்கிறார். தனக்கு பாக்கியா ஆன்டியின் இந்த தைரியம் மிகவும் பிடித்திருப்பதால் தான் வந்ததாக சொல்கிறார்.

மேலும் அமிர்தா நன்றாக சமையல் தெரிந்த பெண் என்று சொல்கிறார் செல்வி. அடுத்ததாக செழியன் மற்றும் ஜெனி ஹாஸ்பிடலில் குழந்தையை கலைப்பது பற்றி பேசிகொண்டுள்ளனர். டாக்டர் உள்ளே அழைக்க செழியன் தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் ஜெனி கர்ப்பமாக இருப்பதால் கரியர் பாதிக்கிறது என்றும் சொல்கிறார்.

இதனால் கோவமடையும் டாக்டர் தானும் இந்த நிலைமையில் இருந்து வந்தவள் தான். முதல் குழந்தையை இப்படி கலைச்சா சிலருக்கு குழந்தையே பிறக்காது என்று சொல்கிறார். இதனால் ஜெனியும் செழியனும் முழிக்கின்றனர். மேலும் பாக்கியா அவரது மாமனாருடன் கடைக்கு செல்கிறார்.

தேவையான சாமான்களின் லிஸ்ட்டை கொடுத்து விட்டு முழு பணம் 2 நாளைக்கு பிறகு தான் தர முடியும் என்று சொன்னதும் கடைக்காரர் யோசிக்க பாக்கியாவின் மாமா எப்படியோ பேரம் பேசி ஒத்துக்கொள்ள வைக்கிறார். அதன் பின் தான் பாத்திர கடைக்கு செல்கின்றனர்.

அங்கும் அனைத்து விஷயங்களையும் பேசி ஒத்துக்கொள்ள வைக்கின்றனர். வீட்டிற்கு வந்து பக்கத்து வீட்டார்களிடம் பொருளை பிரித்து கொடுக்கிறார் பாக்கியா. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here