எதுக்கு இந்த விஷப்பரீச்சை.. தன் கேரியரில் மிகவும் இக்கட்டான முடிவை எடுத்துள்ள நடிகை சமந்தா!

0
எதுக்கு இந்த விஷப்பரீச்சை.. தன் கேரியரில் மிகவும் இக்கட்டான முடிவை எடுத்துள்ள நடிகை சமந்தா!

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து தன் சினிமா வாழ்வை துவங்கினார். பின்னர் தெலுங்கில் அதே படத்தின் ரீமேக்கில் நாயகியாக நடித்து இருப்பார்.

அப்பொழுது இவருடன் சேர்ந்து நடித்த நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தாலும் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவர்கள் இவர்கள். விவகாரத்திற்கு பிறகு தன் கேரியரில் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார் சமந்தா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் பாலிவுட்டில் இவர் முதல் முறையாக களமிறங்கும் படத்தில் பேயாக நடிக்க உள்ளாராம். அமர் கவுசிக் இயக்கி வரும் படத்தில் கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா நடிக்க உள்ளாராம். பேயாக நடிக்க சமந்தா எடுத்துள்ள இந்த முடிவு ஒர்க் அவுட் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here