இவ்வளவு லவ்வா.. விராட்டின் சாதனைக்கு காதல் மனைவி அனுஷ்கா செய்த காரியம் – சமூக வலைத்தளத்தில் வைரல்!

0
இவ்வளவு லவ்வா.. விராட்டின் சாதனைக்கு காதல் மனைவி அனுஷ்கா செய்த காரியம் - சமூக வலைத்தளத்தில் வைரல்!
இவ்வளவு லவ்வா.. விராட்டின் சாதனைக்கு காதல் மனைவி அனுஷ்கா செய்த காரியம் - சமூக வலைத்தளத்தில் வைரல்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் அவரது காதல் மனைவி முதல் டிவில்லியர்ஸ் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் உணர்ச்சிகரமான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

விராட் கோலியின் ஒரு சதம்!!

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனது சதத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவர் ஏறத்தாழ 3 ஆண்டுகள் சர்வதேச தொடர்கள் அனைத்திலும் சதம் அடிக்க முடியாமல் அனைவரது விமர்சனத்தையும் பெற்றார். இதனால் இவரை அணியை விட்டு நீக்கும் அளவிற்கு BCCI நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. அதன் பிறகு இவருக்கு கடைசி வாய்ப்பாக இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைத்தது.

இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட விராட் கோலி முதல் 2 போட்டிகளில் அரைசதம் அடித்து தனது பார்மை ஓரளவிற்கு வெளிக்கொண்டு வந்தார். ஆனால் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் எதிரான அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அவரது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது அனுஷ்கா சர்மா, “என்றென்றும் உன் மீது அன்பு செலுத்துவேன், எக்காலத்திலும்… எப்படியான சூழலிலும்.. நீங்கள் மட்டுமே அன்பே” என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தென் அமெரிக்க வீரரான டிவில்லியர்ஸ் விராட் கோலியை பாராட்டி உங்களது ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. உலகக்கோப்பை வரவிருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் இதுபோன்று சதம் அடித்தது அனைவருக்கும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பாராட்டி உள்ளார். இதனைத் தொடர்ந்து விராட் T20 உலக கோப்பையில் களமிறங்குவது உறுதியாகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here