நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் உயர்வு – எவ்வளவு தெரியுமா..?

0

ந்தியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது,மக்கள் அனைவரும் வேலை இல்லாமலும் எந்த நிதியும் இல்லாமலும் கஷ்டப்படுகின்றனர். மகாத்மா காந்தி தேசிய திட்டத்தை தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது இது ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.

நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு ஊதியம் உயர்வு

நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வும் அடக்கம்.ஏப்ரல் முதல் ஊழியர்களுக்கான ஊதியம் ஒரு நாளைக்கு ரூ.256 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தொகை ரூ.229ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா கோரத்தாண்டவம்

இந்தியாவில் கொரோனா கோர தாண்டவம் ஆடுகிறது, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அரசாணையும் வெளியிட்டுள்ளது. பணியாளர்களுக்கான ஊதியத்தைக் கணக்கிடும் மென்பொருளான செக்யூர் என்னும் மென்பொருளில் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டு 256ஆக பதிவு செய்யப்பட்டது.முந்தைய சம்பளத் தொகையிலிருந்து சுமார் 27 ரூபாய் உயர்த்தி புதிய சம்பளத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here