மாயமான மகனை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு கோடியில் சன்மானம்., சைதை துரைசாமி அதிரடி அறிவிப்பு!! 

0
முன்னாள் மேயரும் அதிமுக எம்எல்ஏவுமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி  கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்துக்கு தனது நண்பருடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது சட்லஜ் நதி கரையோரம் உள்ள நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதிக்குள் மூழ்கியுள்ளது. இதில் அதன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் வெற்றித் துரைசாமியின் நண்பர் படுகாயம் அடைந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஆனால் சட்லஜ் நதிக்குள் மூழ்கிய வெற்றி துரைசாமி கிடைக்கவில்லை.இதனால் கடந்த 3 நாட்களுக்கு மேலாக வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நதிக்குள் மூழ்கிய வெற்றி துரைசாமி குறித்த தகவலை தனக்கு அளிப்பவர்களுக்கு சன்மானமாக ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என அவரது தந்தை  சைதை துறை சாமி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here