உலக கோப்பைக்கு பின்னும் இந்திய அணி தொடர  இருக்கும் யுத்தம்…, பிசிசிஐ வெளியிட்ட மாஸ் அப்டேட்!!

0
சர்வதேச இந்திய அணியானது, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்ததாக மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடர் இந்திய வீரர்களுக்கு ஜூன் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட நன்கு பயிற்சி பெறும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த போட்டிகள் முறையே,
  • ஜூலை  6ம் தேதி – 1வது T20I
  • ஜூலை 7ம் தேதி – 2வது T20I
  • ஜூலை 10ம் தேதி – 3 வது T20I
  • ஜூலை 13ம் தேதி – 4வது T20I
  •  ஜூலை 14ம் தேதி – 5வது T20I

Enewz Tamil WhatsApp Channel 

மாயமான மகனை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு கோடியில் சன்மானம்., சைதை துரைசாமி அதிரடி அறிவிப்பு!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here