காட் ஆப் கிரிக்கெட்..! ஜாம்பவான் சச்சினுக்கு 47வது பிறந்தநாள் – கடந்து வந்த பாதை..!

0

நாடி நரம்பு எல்லாம் கிரிக்கெட் வெறி ஏறிய ஒருவரால் தான் இந்த வகையில் விளையாட முடியும் என்ற அளவுக்கு 24 வருடங்கள் கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்தவர் சச்சின் டெண்டுல்கர். தனது 11வது வயதிலேயே கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சச்சின், சதத்தில் சதம் உள்ளிட்ட பல சாதனைகளை படைத்துள்ளார். இன்று 47வது பிறந்தநாள் காணும் ஜாம்பவான் சச்சின் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ..

பவுலிங் டு பேட்டிங்:

சச்சின் முதன் முதலில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ற ஆசையோடு தான் கிரிக்கெட் உலகினுள் நுழைந்தார். ஆனால் அவரை ரிஜெக்ட் செய்து மாறாக பேட்டிங்கில் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய ஜாம்பவான் டெனிஸ் லில்லி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். முதல் படியே தோல்வியாக அமைந்தாலும் சச்சின் இதனைப் பொருட்படுத்தாமல் பேட்டிங் பயிற்சி எடுக்க ஆச்ரேக்கர் இடம் சென்றார்.

முதல் வாய்ப்பு:

சச்சின் தனது கடினபயிற்சி மற்றும் விடாமுயற்சியால் 1989 இல் பாகிஸ்தான் சென்ற இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் 16 வயதான சச்சினின் மூக்கை உடைத்து ரத்தம் வரச் செய்தார். அதிலிருந்தும் மீண்ட சச்சின் அடுத்த 20 வருடங்களுக்கு மேலாக ஒரு பவுலரையும் விட்டுவைக்காமல் விளாசினார். அவரின் அசைக்க முடியாத டிபென்ஸ் மற்றும் மாஸ்டர் கிளாஸ் ஷாட்களால் அனைத்து பவுலர்களையும் திணறடித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரரான ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டான் ப்ராட்மேன் உடன் ஒப்பிட்டு புகழக்கூடிய அளவிற்கு உயரத்திற்குச் சென்றார் சச்சின். டான் பிராட்மேனே அவரின் மனைவியிடம் சச்சினின் ஆட்டம் தன்னையே தனக்கு நினைவுபடுத்துவதாக கூறி இருப்பதே சச்சின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

விருதுகள் & சாதனைகள்:

சர்வதேச கிரிக்கெட்டில் 34,000 ரன்கள், சதத்தில் சதம் மற்றும் பல்வேறு சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். அவருக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளை அளித்து இந்திய அரசு பெருமைப்படுத்தியது. தற்பொழுது உலகமே கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வரும் வேளையில் சச்சினும் தனது பங்குக்கு நிதியுதவிகள் அளித்தும், இந்த பிறந்தநாளை தான் கொண்டாட போவதில்லை எனவும் அறிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here