“186 ரன்கள் எல்லாம் இவர்கள் சேஸிங்கு பத்தாது”…, RCB வீரர்களை குறித்து சச்சின் புகழாரம்!!

0
"186 ரன்கள் எல்லாம் இவர்கள் சேஸிங்கு பத்தாது"..., RCB வீரர்களை குறித்து சச்சின் புகழாரம்!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்த்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியானது பிளே ஆப் சுற்றை எதிர்நோக்கி விளையாடியது. இந்த போட்டியில், 187 ரன்களை சேஸிங் செய்த RCB அணி விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸின் அதிரடியான பார்ட்னர்ஷிப்பால் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கான போட்டியை RCB அணி தக்க வைத்துக் கொண்டது. மேலும், விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் பார்ட்னர்ஷிப் ஐபிஎல் அரங்கில் சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவரும் இணைந்து 13 போட்டிகளில் 872 ரன்களை சேர்ந்துள்ளனர். இதன் மூலம், ஒட்டுமொத்த ஐபிஎல் அரங்கில் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்து 2வது இடம் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், 2016ம் ஆண்டு விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் 939 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளனர். இவர்களும் RCB வீரர்களை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விராட் கோலியுடன் இணைந்துள்ள இந்த இரு வீரர்களும் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்.

மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., மின்சார வாரியத்துறை அறிவிப்பு!

ஹைதராபாத் அணிக்கு எதிராக, விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸின் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, “விராட் கோலி இந்த போட்டியில் முதல் பந்தை எதிர்கொண்ட போதே எனக்கு தெரிந்தது. இதன் பின் ஃபாஃப் டு பிளெசியுடன் ரன் எடுக்க ஓடிய விதத்தை பார்த்த போது, இவர்களுக்கு 186 ரன்கள் என்ற இலக்கு போததாக இருந்தது” என்று சச்சின் புகழ்ந்து தள்ளி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here