ஆதார் – பான் இணைப்பு.., ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு.., தவறினால் இதுதான் நடக்கும்?

0
ஆதார் - பான் இணைப்பு.., ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு.., தவறினால் இதுதான் நடக்கும்?
ஆதார் - பான் இணைப்பு.., ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு.., தவறினால் இதுதான் நடக்கும்?

பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய ஆதார் கார்டுடன் பான் கார்டு நம்பரை இணைக்க வேண்டும் என்று முன்னதாக வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. அதற்கான கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் பலரும் ஆதாருடன் பான் கார்டை இணைக்காமல் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தாலும் நிறைய பேர் இன்னமும் பான் கார்டை ஆதாருடன் இணைக்காமல் தான் இருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சொல்லப் போனால் பெரும்பாலானோருக்கு இன்னும் இதுபற்றிய விழிப்புணர்வே இல்லை. சரி அபராதம் விதித்தாலாவது மக்கள் வேகமாக இணைப்பார்கள் என்று அரசாங்கம், காலக்கெடுக்குள் இணைக்காவிடில் 1000 ரூபாய் அபராதத்துடன் இணைக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது. மேலும் ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கான கடைசி நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாதா என்று மக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

“186 ரன்கள் எல்லாம் இவர்கள் சேஸிங்கு பத்தாது”…, RCB வீரர்களை குறித்து சச்சின் புகழாரம்!!

இந்நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பான் கார்டை ஆதாருடன் இணைக்க வருகிற ஜூன் 30 தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1 அல்லது அதற்கு பின் இணைப்பவர்களுக்கு கட்டாயமாக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here