மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., மின்சார வாரியத்துறை அறிவிப்பு!

0
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., மின்சார வாரியத்துறை அறிவிப்பு!
மக்களே உஷார்.., நாளை இந்தெந்த பகுதிகளில் பவர் கட்.., மின்சார வாரியத்துறை அறிவிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் நாளை தடை செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேனி மின்சார வாரியத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பராமரிப்பு பணிகள் நாளை தேனி மாவட்டத்தில் சில முக்கிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனால் தேனி கலெக்டர் அலுவலகம், தொழிற்பேட்டை, கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், சிவாஜி நகர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ரோடு, பி.அணைக்கரைப்பட்டி, குரங்கணி, பி.மீனாட்சிபுரம் மற்றும் போடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிக்கு வரும் ஊழியர்களுக்கு எந்த இடையூறும் இல்லாத அளவில் மக்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here