ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து – மனித பரிசோதனை தொடக்கம்..!

0

நாடெங்கிலும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறிய படவில்லை. இதற்கிடையில் ரஷ்யா கொரோனாவிற்கான மருந்து ஒன்றை தயாரித்து உள்ளது. அதனை 11 ஆம் தேதி சோதனை செய்ய உள்ளனர்.

ரஷ்யா

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தொட்டுள்ளது. 4,855 பேர் உயிரிழந்துள்ளனர்.

Health Ministry names reasons behind low COVID-19 incidence in ...

எனவே தீவிர ஆராய்ச்சிக்கு பின் ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதி உதவியுடன் கெம்ரார் என்ற மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்ற ஆன்டிவைரல் மருந்தினை தயாரித்துள்ளது. இதற்கான ஒப்புதலை அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அளித்துள்ளது.

அவிஃபேவிர்

மேலும் இந்த மருந்து வரும் 11 ஆம் தேதி முதல் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 1 மாதத்திற்கு 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த மறுத்து இந்த நோயை குணப்படுத்தும் என்று ஆர்டிஐஎப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கான மருந்து: ரஷ்யா அடுத்த ...

இந்த மருந்து 1990 இல் ஜப்பான் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட ஃபேவிபிரவிர் என்னும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அவிஃபேவிர் மருந்தை கண்டுபிடித்துள்ளதாக கிரில் திமித்ரியேவ் தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here